திருமண பொருத்தம் வழிகாட்டி

யோனி பொருத்தம் என்றால் என்ன? | Yoni Porutham Meaning in Tamil

📅 ஜூலை 2026|⏱ 6 நிமிட வாசிப்பு|✍ ஜோதிட வல்லுநர் குழு

இலவச திருமண பொருத்தம்

கீழே உள்ள மணமகன் மற்றும் மணமகளின் விவரங்களைப் பூர்த்தி செய்து திருமண பொருத்தத்தை பாருங்கள்.
Groom
மணமகன் விவரங்கள்
Groom Birth Details
0/4 பூர்த்தி
1
2
பிறந்த தேதி (Date of Birth) *
3
பிறந்த நேரம் (Birth Time) *
4
Bride
மணமகள் விவரங்கள்
Bride Birth Details
0/4 பூர்த்தி
1
2
பிறந்த தேதி (Date of Birth) *
3
பிறந்த நேரம் (Birth Time) *
4
🪷

உங்களது விவரங்கள் பாதுகாப்பாகவும் ரகசியமாகவும் வைக்கப்படும்.

Yoni Porutham - Physical & Sexual Compatibility Matching

யோனி பொருத்தம் என்றால் என்ன? (Yoni Porutham Meaning & Rules)

திருமணப் பொருத்தத்துல மொத்தம் இருக்குற 10 பொருத்தங்கள்ல, தம்பதிகளோட உடல் ஒத்திசைவு மற்றும் தாம்பத்திய சுகத்தைப் பத்திப் பேசுற ஒரே பொருத்தம் இந்த யோனி பொருத்தம் (Yoni Porutham) தான். ஜோதிட சாஸ்திரத்துல 27 நட்சத்திரங்களையும் 14 விலங்கு வடிவங்களா பிரிச்சு வச்சிருக்காங்க. ஏன் இந்த பொருத்தம் ரொம்ப முக்கியம்? பகை விலங்குகள் ஒன்னா சேர்ந்தா என்ன நடக்கும்? இதோட முழு விவரத்தை ரொம்ப எதார்த்தமா இந்த ஆட்டிகிள்ல பார்ப்போம்.

ஆனாலும், யோனி பொருத்தம் மட்டுமே தாம்பத்திய வாழ்க்கையின் வெற்றியை தீர்விப்பதில்லை. தம்பதியருக்குள் உடல் மற்றும் மன ஒற்றுமையை மேம்படுத்தும் கிரக அமைப்புகளையும் தசா சந்தி பொருத்தங்களையும் விரிவாக சோதிப்பது நல்லது.

📢 ஜோதிட அலர்ட்! (Premium Astrology Offer)

உங்க ஜாதகத்துல யோனி பொருத்தம் இல்லைன்னு கவலைப்படுறீங்களா? அவசரப்பட்டு முடிவெடுக்காதீங்க. ஜாதகத்துல லக்ன பொருத்தம், ராசி அதிபதி நட்பு போன்ற அமைப்புகளை வச்சு இந்த யோனி தோஷம் விலகிடும்.

உங்களோட துல்லியமான ஜாதகப் பொருத்தத்தை அறிஞ்சுக்க, எங்களோட 17 பக்க பிரீமியம் திருமண பொருத்தம் PDF அறிக்கை (₹99)-ஐ இப்போதே டவுன்லோட் செய்யுங்க. உங்க வாட்ஸ்அப் நம்பருக்கே PDF வந்துடும்!

யோனி பொருத்தம் - சிம்பிள் விளக்கம் (What is Yoni Porutham?)

ரொம்ப சுருக்கமா சொல்லணும்னா, கணவன்-மனைவி ரெண்டு பேருக்கும் இடையில இருக்குற உடல் ரீதியான ஈர்ப்பு, தாம்பத்திய உறவு மற்றும் விட்டுக்கொடுத்துப் போற குணம் எப்படி இருக்கும்னு கணிக்கிறது தான் இந்த யோனி பொருத்தம்.

ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு விலங்கு குறியீடாக இருக்கும். இயற்கையிலேயே சில விலங்குகளுக்கு ஒன்னோட ஒன்னு பகை குணம் இருக்கும் (உதாரணத்துக்கு பூனைக்கும் எலிக்கும், பாம்புக்கு கீரிக்கும் ஆகாது). அதே போல பகை விலங்கு நட்சத்திரங்கள் ஒன்னா சேர்ந்தா, அவங்க திருமண வாழ்க்கையில அடிக்கடி சண்டைகளும் தாம்பத்திய குறைபாடுகளும் வர வாய்ப்பிருக்குன்னு சொல்லுவாங்க.

14 விலங்குகளும் நட்சத்திரங்களும் (14 Animal Signs & Nakshatras)

27 நட்சத்திரங்களுக்கும் உரிய 14 விலங்குகளின் பட்டியல் இதோ:

🐎 குதிரை (Horse): அஸ்வினி, சதயம்.
🐘 யானை (Elephant): பரணி, ரேவதி.
🐐 ஆடு (Sheep): கார்த்திகை, பூசம்.
🐍 பாம்பு (Serpent): ரோகிணி, மிருகசீரிடம்.
🐕 நாய் (Dog): திருவாதிரை, மூலம்.
🐈 பூனை (Cat): புனர்பூசம், ஆயில்யம்.
🐀 எலி (Rat): மகம், பூரம்.
🐄 பசு (Cow): உத்திரம், உத்திரட்டாதி.
🐃 எருமை (Buffalo): அஸ்தம், சுவாதி.
🐅 புலி (Tiger): சித்திரை, விசாகம்.
🦌 மான் (Hare/Deer): கேட்டை, அனுஷம்.
🦦 கீரி (Mongoose): உத்திராடம்.
🐒 குரங்கு (Monkey): பூராடம், திருவோணம்.
🦁 சிங்கம் (Lion): பூரட்டாதி, அவிட்டம்.

பகை யோனிகள் - தவிர்க்க வேண்டியவை (Enemy Animals Matrix)

இயற்கையிலேயே எதிரிகளாக இருக்கும் விலங்குகளின் நட்சத்திரங்களைக் கொண்ட ஆண்-பெண் இணைந்தால், அதை பகை யோனி என்று சொல்வோம்.

பாம்பு × கீரி (Serpent × Mongoose)
நட்சத்திரங்கள்: ரோகிணி / மிருகசீரிடம் × உத்திராடம்
பூனை × எலி (Cat × Rat)
நட்சத்திரங்கள்: புனர்பூசம் / ஆயில்யம் × மகம் / பூரம்
சிங்கம் × யானை (Lion × Elephant)
நட்சத்திரங்கள்: பூரட்டாதி / அவிட்டம் × பரணி / ரேவதி
குதிரை × எருமை (Horse × Buffalo)
நட்சத்திரங்கள்: அஸ்வினி / சதயம் × அஸ்தம் / சுவாதி
பசு × புலி (Cow × Tiger)
நட்சத்திரங்கள்: உத்திரம் / உத்திரட்டாதி × சித்திரை / விசாகம்
குரங்கு × ஆடு (Monkey × Sheep)
நட்சத்திரங்கள்: பூராடம் / திருவோணம் × கார்த்திகை / பூசம்
நாய் × மான் (Dog × Deer)
நட்சத்திரங்கள்: திருவாதிரை / மூலம் × கேட்டை / அனுஷம்

இந்த ஜோடிகள் ஒன்னா இணையும் போது உடல் ஒற்றுமை குறைவதாகவும், எப்போது பார்த்தாலும் சண்டை சச்சரவுகள் வருவதாகவும் நம்பப்படுகிறது.

யோனி பொருத்தம் இல்லைனா பயந்துடணுமா? (Exceptions & Remedies)

உங்க ஜாதகத்துல பகை யோனி அல்லது யோனி பொருத்தம் இல்லைனு காட்டுனா பயப்படத் தேவையில்லை. இதற்கும் ஜோதிடத்தில் விதிவிலக்குகள் உள்ளன:

  • ராசி அதிபதி நட்பு: இருவருடைய ராசி அதிபர்கள் ஒருவருக்கொருவர் நட்பு கிரகம் அல்லது ஒரே கிரகமாக இருந்தால் யோனி தோஷத்தின் வீரியம் சுத்தமாக இருக்காது.
  • மனப்பொருத்தம்: இருவருக்கும் குண பொருத்தம் மற்றும் லக்ன பொருத்தம் நன்றாக இருந்தால், உடலளவிலும் நல்ல புரிதல் தானாகவே உண்டாகும்.
  • முக்கிய பொருத்தங்கள்: திருமணத்தில் மிக முக்கியமான ரஜ்ஜு பொருத்தம் (Rajju Porutham) மற்றும் தின பொருத்தம் (Thina Porutham) நன்றாக அமைந்துவிட்டால், யோனி பொருத்தம் இல்லாதது ஒரு பெரிய தடையாக இருக்காது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

கேள்வி: யோனி பொருத்தம் எதைக் குறிக்கிறது?
பதில்: தம்பதியருக்குள் இருக்கும் உடல் ரீதியான ஈர்ப்பு, தாம்பத்திய உறவின் மகிழ்ச்சி மற்றும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் தன்மையைக் குறிக்கிறது.
கேள்வி: பகை யோனி இருந்தால் திருமணம் செய்யலாமா?
பதில்: ராசி அதிபதிகள் நட்பு கிரகங்களாக இருந்தாலோ, லக்னப் பொருத்தம் நன்றாக இருந்தாலோ தாராளமாகத் திருமணம் செய்யலாம். அனுபவமுள்ள ஜோதிடரின் ஆலோசனை நல்லது.
கேள்வி: யோனி பொருத்தத்தில் மிக உன்னத சேர்க்கை எது?
பதில்: இரண்டு பேருக்கும் ஒரே விலங்கு (உதாரணமாக இருவருக்குமே பசு யோனி) அமைவது உன்னதமான சேர்க்கை ஆகும்.