திருமண பொருத்தம் வழிகாட்டி

கண பொருத்தம் என்றால் என்ன? | Gana Porutham Meaning in Tamil

📅 ஜூலை 2026|⏱ 5 நிமிட வாசிப்பு|✍ ஜோதிட வல்லுநர் குழு

இலவச திருமண பொருத்தம்

கீழே உள்ள மணமகன் மற்றும் மணமகளின் விவரங்களைப் பூர்த்தி செய்து திருமண பொருத்தத்தை பாருங்கள்.
Groom
மணமகன் விவரங்கள்
Groom Birth Details
0/4 பூர்த்தி
1
2
பிறந்த தேதி (Date of Birth) *
3
பிறந்த நேரம் (Birth Time) *
4
Bride
மணமகள் விவரங்கள்
Bride Birth Details
0/4 பூர்த்தி
1
2
பிறந்த தேதி (Date of Birth) *
3
பிறந்த நேரம் (Birth Time) *
4
🪷

உங்களது விவரங்கள் பாதுகாப்பாகவும் ரகசியமாகவும் வைக்கப்படும்.

Gana Porutham - Character & Temperament Compatibility

கண பொருத்தம் என்றால் என்ன? (Gana Porutham Meaning & Rules)

திருமணப் பொருத்தத்துல மொத்தம் இருக்குற 10 பொருத்தங்கள்ல, தம்பதிகளோட குண ஒற்றுமை, மனநிலை மற்றும் எண்ண ஓட்டங்களைப் பத்திப் பேசுற மிக முக்கியமான பொருத்தம் இந்த கண பொருத்தம் (Gana Porutham). ஜோதிட சாஸ்திரத்துல 27 நட்சத்திரங்களையும் மூன்று கணங்களா பிரிச்சு வச்சிருக்காங்க. ஏன் இந்த பொருத்தம் ரொம்ப முக்கியம்? தேவ கணமும் ராட்சஸ கணமும் இணைந்தால் என்ன நடக்கும்? இதோட முழு விவரத்தை ரொம்ப எதார்த்தமா இந்த ஆட்டிகிள்ல பார்ப்போம்.

ஆனால், பெரும்பாலானோர் செய்யும் தவறு இதுதான். வெறும் நட்சத்திரங்களை மட்டும் கொண்டு கணக்கிடப்படும் கண பொருத்தம் முழுமையானது அல்ல. மணமக்களின் குணங்களை தீர்மானிக்கும் லக்னம், லக்னாதிபதி மற்றும் தசா சந்தி பொருத்தங்களை ஆராய்வது மிகவும் அவசியம்.

📢 ஜோதிட அலர்ட்! (Premium Astrology Offer)

உங்க ஜாதகத்துல கண பொருத்தம் இல்லைன்னு கவலைப்படுறீங்களா? அவசரப்பட்டு முடிவெடுக்காதீங்க. ஜாதகத்துல லக்ன பொருத்தம், ராசி அதிபதி நட்பு போன்ற அமைப்புகளை வச்சு இந்த கண தோஷம் விலகிடும்.

உங்களோட துல்லியமான ஜாதகப் பொருத்தத்தை அறிஞ்சுக்க, எங்களோட 17 பக்க பிரீமியம் திருமண பொருத்தம் PDF அறிக்கை (₹99)-ஐ இப்போதே டவுன்லோட் செய்யுங்க. உங்க வாட்ஸ்அப் நம்பருக்கே PDF வந்துடும்!

கண பொருத்தம் - சிம்பிள் விளக்கம் (What is Gana Porutham?)

ரொம்ப சுருக்கமா சொல்லணும்னா, கண பொருத்தம் அப்படிங்கிறது கணவன்-மனைவி ரெண்டு பேருக்கு இடையில இருக்குற மன ஒற்றுமையைக் குறிக்கிறது. அவங்களோட சிந்தனைகள், குணங்கள் எப்படி இருக்கும்னு இத வச்சு தெரிஞ்சுக்கலாம்.

மனிதர்களின் குணங்களை ஜோதிட சாஸ்திரம் மூன்று வகையா பிரிக்குது:

👼 தேவ கணம் (Deva Ganam - சாந்த குணம்):

அமைதி, அன்பு, நற்பண்புகள் மற்றும் கடவுள் பக்தி உள்ளவர்கள்.

🧑 மனுஷ கணம் (Manusha Ganam - மனித குணம்):

நடுத்தர குணம், கோபம் மற்றும் பாசம் கலந்திருப்பவர்கள், குடும்ப பற்று அதிகம் உள்ளவர்கள்.

👹 ராட்சஸ கணம் (Rakshasa Ganam - முரட்டு குணம்):

ஆதிக்கம் செலுத்துபவர்கள், சுதந்திரமாக இருக்க நினைப்பவர்கள், தைரியம் மற்றும் முரட்டுத்தனம் உள்ளவர்கள்.

3 கணங்களும் நட்சத்திரங்களும் (3 Ganas & Nakshatras)

27 நட்சத்திரங்களுக்கும் உரிய கணங்கள் இதோ:

1. தேவ கணம் (Deva Gana)

அஸ்வினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி.

2. மனுஷ கணம் (Manusha Gana)

பரணி, ரோகிணி, திருவாதிரை, பூராடம், உத்திரம், பூரம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி.

3. ராட்சஸ கணம் (Rakshasa Gana)

கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம்.

கண பொருத்தம் விதிகள் (Gana Compatibility Rules)

தம்பதியினரின் கணங்கள் எவ்வாறு இணைய வேண்டும் என்பதற்கான விதிகள்:

  • ஒரே கணங்கள்: தேவ கணம் + தேவ கணம், மனுஷ கணம் + மனுஷ கணம், ராட்சஸ கணம் + ராட்சஸ கணம் இணைவது மிகவும் உன்னதமான பொருத்தம் (Best Match).
  • தேவ கணம் + மனுஷ கணம்: இதுவும் நல்ல சேர்க்கைதான், சுமாரான ஒற்றுமை இருக்கும் (Ordinary Match).
  • தேவ கணம் + ராட்சஸ கணம்: இது பொருந்தாது (No Match). தேவ கணத்தினர் மிகவும் சாந்தமாக இருப்பார்கள், ராட்சஸ கணத்தினர் ஆதிக்கம் செலுத்த நினைப்பார்கள். இதனால் குடும்பத்தில் எப்போதும் சண்டை சச்சரவு வரலாம்.
  • மனுஷ கணம் + ராட்சஸ கணம்: இது ஓரளவுக்குப் பொருந்தும் (Medium Match).

கண பொருத்தம் இல்லைனா பயந்துடணுமா? (Exceptions & Remedies)

உங்க ஜாதகத்துல கண பொருத்தம் இல்லைனு காட்டுனா பயப்படத் தேவையில்லை. இதற்கும் ஜோதிடத்தில் விதிவிலக்குகள் உள்ளன:

  • ராசி அதிபதி நட்பு: இருவருடைய ராசி அதிபர்கள் ஒருவருக்கொருவர் நட்பு கிரகம் அல்லது ஒரே கிரகமாக இருந்தால் கண தோஷம் வேலை செய்யாது.
  • லக்ன பொருத்தம்: இருவருக்கும் லக்னப் பொருத்தம் நன்றாக அமைந்துவிட்டால், குண வேறுபாடுகள் இருந்தாலும் அவர்கள் அதை சமாளித்து வாழ்ந்துவிடுவார்கள்.
  • முக்கிய பொருத்தங்கள்: திருமணத்தில் மிக முக்கியமான ரஜ்ஜு பொருத்தம் (Rajju Porutham), தின பொருத்தம் (Thina Porutham) மற்றும் யோனி பொருத்தம் (Yoni Porutham) நன்றாக அமைந்துவிட்டால், கண பொருத்தம் இல்லாதது ஒரு பெரிய தடையாக இருக்காது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

கேள்வி: கண பொருத்தம் எதைக் குறிக்கிறது?
பதில்: தம்பதியருக்குள் இருக்கும் மன ஒற்றுமை, எண்ண ஓட்டம் மற்றும் குணாதிசயங்களின் பொருத்தத்தைக் குறிக்கிறது.
கேள்வி: தேவ கணமும் ராட்சஸ கணமும் திருமணம் செய்யலாமா?
பதில்: பொதுவாக இதைத் தவிர்ப்பது நல்லது. ஆனால் ராசி அதிபதிகள் நட்பு கிரகங்களாக இருந்தாலோ, லக்னப் பொருத்தம் நன்றாக இருந்தாலோ தாராளமாகத் திருமணம் செய்யலாம்.
கேள்வி: 10 பொருத்தத்தில் எது மிகவும் முக்கியம்?
பதில்: பத்து பொருத்தங்களில் ரஜ்ஜு பொருத்தம் (Rajju Porutham) தான் மிக மிக முக்கியமானது. இது கணவனின் ஆயுளோடு தொடர்புடையது என்பதால் இதில் சமரசம் செய்யக் கூடாது.