திருமண பொருத்தம் வழிகாட்டி

தின பொருத்தம் என்றால் என்ன? | Dina Porutham Meaning in Tamil

📅 ஜூலை 2026|⏱ 5 நிமிட வாசிப்பு|✍ ஜோதிட வல்லுநர் குழு

இலவச திருமண பொருத்தம்

கீழே உள்ள மணமகன் மற்றும் மணமகளின் விவரங்களைப் பூர்த்தி செய்து திருமண பொருத்தத்தை பாருங்கள்.
Groom
மணமகன் விவரங்கள்
Groom Birth Details
0/4 பூர்த்தி
1
2
பிறந்த தேதி (Date of Birth) *
3
பிறந்த நேரம் (Birth Time) *
4
Bride
மணமகள் விவரங்கள்
Bride Birth Details
0/4 பூர்த்தி
1
2
பிறந்த தேதி (Date of Birth) *
3
பிறந்த நேரம் (Birth Time) *
4
🪷

உங்களது விவரங்கள் பாதுகாப்பாகவும் ரகசியமாகவும் வைக்கப்படும்.

Dina Porutham - Health & Longevity Horoscope Matching

தின பொருத்தம்: தம்பதியரின் ஆரோக்கியம் மற்றும் ஆயுளைத் தீர்மானிக்கும் முதல் பொருத்தம்!

திருமணப் பேச்சு எடுத்தாலே முதல்ல வர்றது ஜாதகப் பொருத்தம் தான். அதுலயும் நம்ம ஊர்ல பார்க்குற 10 பொருத்தங்கள்ல முதலாவதா இருக்குறது இந்த தின பொருத்தம் (Dina Porutham).

ஆனால், ஒரு ஜோதிட உண்மை. ஆன்லைன்ல சும்மா நட்சத்திரத்தை மட்டும் ஒப்பிட்டுப் பார்க்கிற பொருத்தங்கள் வெறும் 10% தான்! உங்க இரண்டு பேரின் ஜாதகத்தில் உள்ள ஆயுள் காரகனான சனியின் நிலை மற்றும் தசா சந்தி பொருத்தத்தை பார்க்காமல் திருமண முடிவை எடுக்கக் கூடாது.

📢 ஜோதிட அலர்ட்!

உங்க ஜாதகத்துல தின பொருத்தம் இல்லைன்னு கவலைப்படுறீங்களா? அவசரப்பட்டு முடிவெடுக்காதீங்க. ஜாதகத்துல லக்ன பலம், செவ்வாய் தோஷம் மற்றும் கிரக அமைப்புகளை வச்சு இந்த தோஷம் சரியாகிடும்.

தின பொருத்தம் - சிம்பிள் விளக்கம் (Dina Porutham Meaning)

ரொம்ப சுருக்கமா சொல்லணும்னா, கல்யாணத்துக்கு அப்புறம் கணவன்-மனைவி ரெண்டு பேரும் எந்த ஒரு நோய் நொடியும் இல்லாம, நல்ல ஆரோக்கியத்தோடவும் ஆயுளோடவும் வாழ்வாங்களான்னு கணிக்கிறது தான் இந்த தின பொருத்தம்.

'தினம்' அப்படின்ன்னா நாள்னு அர்த்தம். தம்பதிகளோட அன்றாட வாழ்க்கை எந்த அளவுக்கு நிம்மதியா, சந்தோஷமா இருக்கும்னு இத வச்சு தெரிஞ்சுக்கலாம். குறிப்பா, மாப்பிள்ளையோட ஆயுள் பலம் எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்க இந்த Dina Porutham ரொம்பவே உதவுது.

தின பொருத்தம் எப்படி கணக்கிடப்படுது? (Dina Porutham Calculation)

இந்த பொருத்தத்தைக் கணக்கு போடுறது ரொம்ப கஷ்டம்லாம் இல்ல. நீங்களே கூட உங்க மொபைல்ல இதை ஈஸியா கணக்கு போட்டுப் பாக்கலாம். அதுக்கு இந்த சிம்பிள் ஸ்டெப்ஸ ஃபாலோ பண்ணுங்க:

  1. பொண்ணோட பிறப்பு நட்சத்திரத்துல இருந்து பையனோட நட்சத்திரம் வரைக்கும் வரிசையா எண்ணிக்குங்க.
  2. எண்ணி வர்ற மொத்த நம்பரை 9-ஆல வகுக்கணும் (Divide by 9).
  3. வகுத்ததுக்கு அப்புறம் மீதி (Remainder) வர்ற நம்பரை வச்சு தான் பொருத்தம் இருக்கா இல்லையான்னு முடிவு பண்ணுவாங்க.

மீதி வர்ற நம்பருக்கான தாரா பலன்கள் (Navatara Results):

மீதி வர்ற எண்களை ஜோதிடத்துல 'நவதாரா' (Navatara) அப்படின்னு சொல்லுவாங்க. அதோட பலன்கள் இதோ:

மீதி 1 (ஜென்ம தாரா)பொருந்தாது

உடம்புல சின்ன சின்ன ஆரோக்கிய குறைபாடுகள் வரலாம். அதனால் இது பொருத்தம் இல்லைனு எடுத்துப்பாங்க.

மீதி 2 (சம்பத்து தாரா)பொருந்தும்

வீடு தேடி செல்வம் வரும். குடும்பத்துல வசதிகள் பெருகும். இது மிகவும் நல்ல பொருத்தம்.

மீதி 3 (விபத்து தாரா)பொருந்தாது

வாழ்க்கையில தேவையில்லாத சவால்களும் பிரச்சனைகளும் வர வாய்ப்பிருக்கு. இது பொருத்தம் இல்லை.

மீதி 4 (க்ஷேம தாரா)பொருந்தும்

குடும்பத்துல எப்போதுமே நிம்மதியும், பாதுகாப்பான சூழலும் இருக்கும். இது சூப்பரான பொருத்தம்.

மீதி 5 (ப்ரத்யக் தாரா)பொருந்தாது

வீண் அலைச்சலும், சின்ன சின்ன சண்டைகளும் வரலாம். இது பொருத்தம் இல்லை.

மீதி 6 (சாதக தாரா)பொருந்தும்

தொட்டதெல்லாம் துலங்கும். எடுக்குற காரியங்கள்ல வெற்றி கிடைக்கும். இதுவும் நல்ல பொருத்தம்.

மீதி 7 (வதை தாரா)பொருந்தாது

குடும்பத்துல நிம்மதி குறைய வாய்ப்பிருக்கு. இது பொருத்தம் இல்லை.

மீதி 8 (மித்ர தாரா)பொருந்தும்

கணவன்-மனைவிக்குள்ள நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கும். நல்ல நண்பர்கள் போல இருப்பாங்க. இது பொருந்தும்.

மீதி 9 அல்லது 0 (பரம மித்ர தாரா)சிறந்த பொருத்தம்

தம்பதிக்குள்ள உன்னதமான அன்பு இருக்கும். எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலயும் பிரிய மாட்டாங்க. இது மிகவும் சிறந்த பொருத்தம்.

சுருக்கமா சொல்லணும்னா: வகுத்த பிறகு மீதி 2, 4, 6, 8, 9 (அல்லது 0) அப்படின்னு வந்தா தின பொருத்தம் இருக்கு. ஒருவேளை மீதி 1, 3, 5, 7-னு வந்தா தின பொருத்தம் இல்லை.

...தின பொருத்தம் இல்லைனா பயந்துடணுமா? (Exceptions & Remedies)

நிறையப் பேரு ஆன்லைன்ல 10 பொருத்தம் செக் பண்ணி பார்த்துட்டு, தின பொருத்தம் இல்லைனு உடனே கவலைப்பட ஆரம்பிச்சிடுறாங்க. ஆனா நிஜத்துல அப்படி பயப்பட வேண்டிய அவசியம் இல்ல. ஜோதிடத்துல இதுக்கு சில முக்கிய விதிவிலக்குகள் (Exceptions) இருக்கு:

  • ஒரே நட்சத்திர விதிவிலக்கு: பொண்ணும் பையனும் ஒரே நட்சத்திரத்துல பிறந்திருந்தா (ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், அஸ்தம், திருவோணம், சதயம்), அவங்களுக்கு தின பொருத்தம் பார்க்கத் தேவையில்லை.
  • ராசி அதிபதி நட்பு: இரண்டு பேரோட ராசி அதிபர்களும் (Rasi Lords) நண்பர்களா இருந்தா (உதாரணத்துக்கு சூரியன் - செவ்வாய், அல்லது குரு - சந்திரன்), தின பொருத்தம் இல்லைனாலும் தோஷம் வேலை செய்யாது.
  • ரஜ்ஜு பொருத்தம்: 10 பொருத்தங்கள்லயே ரொம்ப முக்கியமானது ரஜ்ஜு பொருத்தம் (Rajju Porutham) தான். அது நல்லா பொருந்து வந்துட்டாலே, தின பொருத்தம் இல்லாத சின்ன குறையை பெருசா எடுத்துக்க வேண்டியதில்ல.
  • யோனி பொருத்தம்: தம்பதியரின் உடல் இணக்கத்தை அறிய யோனி பொருத்தம் (Yoni Porutham) முக்கியமானது. இதையும் சேர்த்துப் பார்ப்பது நல்லது.
  • கண பொருத்தம்: மன ஒற்றுமைக்கு கண பொருத்தம் (Gana Porutham) துணைபுரிகிறது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

கேள்வி: தின பொருத்தம் எதை குறிக்கிறது?
பதில்: தம்பதியரின் அன்றாட ஆரோக்கியம், ஆயுள் பலம் மற்றும் மன ஒற்றுமையை தின பொருத்தம் குறிக்கிறது.
கேள்வி: தின பொருத்தம் இல்லை என்றால் பரிகாரம் உண்டா?
பதில்: தின பொருத்தம் இல்லாதது ஒரு பெரிய தோஷம் இல்லை. மற்ற முக்கிய பொருத்தங்களான ரஜ்ஜு, யோனி மற்றும் ராசி அதிபதி பொருத்தங்கள் நன்றாக இருந்தால் எந்த பரிகாரமும் தேவையில்லை.
கேள்வி: 10 பொருத்தத்தில் எது மிகவும் முக்கியம்?
பதில்: பத்து பொருத்தங்களில் ரஜ்ஜு பொருத்தம் (Rajju Porutham) தான் மிக மிக முக்கியமானது. இது கணவனின் ஆயுளோடு தொடர்புடையது என்பதால் இதில் சமரசம் செய்யக் கூடாது.